“சந்நிதியான் அற்புதங்கள்”
(நூலை நகரபிதா ந. அனந்தராஜ் வெளியிட்டு வைக்க அதனை வீ.இ. வடிவேற்கரசன் பெற்றுக்கொள்கிறார். அருகில் நூலாசிரியர் ந.அரியரத்தினம்.)
திரு ந. அரியரத்தினம் எழுதிய “சந்நிதியான் அற்புதங்கள்” (மூன்றாம் பாகம்) நூலின் வெளியீட்டு விழா 29.08.2012 புதன் மாலை 6.00 மணியளவில் தொண்டைமானாறு செல்வச்சந்நிதியில் அமைந்திருக்கும் ‘செல்லையாஐயர் அன்னதான கலாசார மண்டபத்தில்’ இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வு அதிபர் திரு கு. இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது. திரு குமாரசாமிஐயர் வாழ்த்துரையினையும், திரு வீ.இ. வடிவேற்கரசன், மற்றும் ஓய்வுபெற்ற அதிபர் திருமதி சுரேந்திரநாதன் ஆகியோர் கருத்துரைகளை நிகழ்த்தினர்.நிகழ்வில் நூலின் வெளியீட்டுரையை வல்வெட்டித்துறை நகரபிதா திரு ந. அனந்தராஜ் அவர்கள் நிகழ்த்தினார்.
நூலாசிரியர் திரு ந. அரியரத்தினம் அவர்கள் (தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய முன்னாள் அதிபர் மற்றும் ஓய்வுபெற்ற கோட்டக்கல்வி அதிகாரி - வவுனியா வடக்கு) ஏற்புரையினையும்; திரு ந. சிவரத்தினம் அவர்கள் நன்றியுரையினையும் நிகழ்த்தினர்.
பதிவும் படங்களும் : சு. குணேஸ்வரன்
நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்
No comments:
Post a Comment